ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் மற்றும் மோகன்லால் நடிக்கும் வில்லன் படத்தை இயக்கிவரும் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இருவரும் அப்செட்டில் இருக்கின்றனர்.. ஆனால் இரண்டுமே வேறுவேறு தனிப்பட்ட காரணங்களுக்காக.. துல்கர் சல்மானுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.. இதனால் துல்கர், அவரது தந்தை மம்முட்டி உட்பட மொத்த குடும்பமே சந்தோஷமாக இருகிறார்கள். ஆனாலும் சில பேர் ஆர்வக்கோளாறில் இதுதான் துல்கரின் மகள் படம் என ஆளாளுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்களாம். இதனால் அப்செட்டான துல்கர் சல்மான், தயவுசெய்து இது போல செய்யவேண்டாம்.. எங்களது பிரவைசியையும் கொஞ்சம் மதியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்..
இது இப்படி என்றால், மோகன்லால் நடிக்கும் 'வில்லன்' படத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணனுக்கோ வேறுவிதமான வருத்தம். சமீபத்தில் வில்லன் படத்தின் டீசரை வெளியிட்டார் உன்னிகிருஷ்ணன்.. இந்த டீசரில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்துவிட்டு, சோஷியல் மீடியாவில் இதுதான் 'வில்லன்' படத்தின் கதை என வாய்க்கு வந்தபடி அளந்துவிடுகிறார்களாம். தயவுசெய்து இப்படி தவறான கருத்துக்களை பரப்பவேண்டாம்.. இதனால் படம் மட்டுமல்ல படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை பேரின் உழைப்பும் வீணாகி விடும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.