ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சல்மானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவி மலைக்கா அரோரா கான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, மலைக்கா, நடிகர் அர்ஜூன் கபூருடன் நெருக்கமாக இருப்பதால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மலைக்கா அரோரா கான், சூசானே ரோஷன் மற்றும் பிபாஷா பாசு பங்கேற்றனர்.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் மலைக்காவிடம், அர்ஜூன் கபூர் உடனான உறவு பற்றி கேட்க கோபமான மலைக்கா, இங்கே தனித்தனியாக மூன்று அழகான பெண்கள் உள்ளோம். எங்களை பற்றியும், இந்த நிகழ்ச்சியை பற்றியும் கேள்வி கேட்கலாமே. அதைவிடுத்து கிசுகிசு பற்றி எதற்காக கேட்கிறீர்கள் என்றார்.