ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகேஷ் பட் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான படம் சதக். சஞ்சய் தத், பூஜா பட் முதன்மை ரோலில் நடித்திருந்தனர். இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க திட்டமிட்டுள்ளனர். சதக் 2 என்ற பெயரில் உருவாக இருக்கும் இப்படம் பற்றி பூஜா பட் கூறியிருப்பதாவது... "சதக்-2 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. என் தந்தை மகேஷ் பட், தற்போது இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு போன்ற விஷயங்களும் பேசப்பட்டு வருகிறது. எல்லாம் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே சதக்-2 படத்திலும் சஞ்சய் தத்தே நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.