தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் 'விவேகம்' படத்தின் டீசர் வரும் 11ம் தேதியன்று யு டியுபில் வழக்கம் போலவே நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாக உள்ளது. நடுராத்திரியில் காத்திருந்து டீசரைப் பார்த்து ஷேர் செய்து, அதை மிகப்பெரும் சாதனைக்குத் தள்ள வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த 'வேதாளம்' படத்திற்கப் பிறகு வெளியான 'கபாலி, தெறி, பாகுபலி 2' டீசர், டிரைலர்கள் புதிய சாதனைகளைப் படைத்துள்ளன. அவற்றை முறியடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
'விவேகம்' டீசர் வெளிவந்த பிறகு அஜித் ரசிகர்கள் என்ன விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்களின் டிவிட்டர் கணக்குகளில் பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒரு தகவலைப் பார்க்க நேர்ந்தது. அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள விதிகள் இதுதான்.
1. டீசரை டவுன்லோட் செய்யாதீர்கள். அதை டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் பதிவிடுங்கள்.
2. டீசர் லின்கை டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் ஷேர் செய்யுங்கள்.
3. பாகுபலி 2, கபாலி, தெறி படங்களின், பார்வைகள், லைக்குகள் ஆகிய சாதனைகளை நாம் முறியடிக்க வேண்டும்.
4. அனைவரும் யு டியூபில் மட்டுமே டீசரைப் பார்க்க வேண்டும், அதோடு லைக்கும் செய்ய வேண்டும்.
இதை மதிக்க வேண்டும், தொடர வேண்டும், எங்கும் பகிர வேண்டும். மே 11 - விவேகம் டீசர் நாள்,” எனப் பரப்பி வருகிறார்கள்.