டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியத் திரையுலகமே கடந்த பத்து நாட்களாக 'பாகுபலி 2' ஜுரத்தில் உள்ளது. அதனால் மற்ற படங்களைப் பற்றிய செய்திகளும், தகவல்களும் அதிகமாக மக்கள் கண்களில் படுவதில்லை. அவர்கள் 'பாகுபலி 2' பற்றிய செய்திகளையே அதிகம் விரும்பிப் படித்து வருகிறார்கள்.
உலக அளவில் அதிக தியேட்டர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் ஆமீர்கான் நடித்துள்ள 'தங்கல்' படம் கடந்த வெள்ளியன்று சீனாவில் சுமார் 7000 தியேட்ர்களில் வெளியாகியுள்ளது. ஹிந்தி நடிகர்களில் ஆமீர்கானுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு முன் அவர் நடித்த 'பிகே, 3 இடியட்ஸ்' ஆகிய படங்களை ரசிகர்கள் வரவேற்றார்கள். 'பிகே' படம் அங்கு 100 கோடி ரூபாய் வசூலையும் கடந்தது.
இப்போது வெளியாகியுள்ள 'தங்கல்' படத்திற்கும் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பு உள்ளதாம். இளம் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆவலுடன் வருவதாகச் சொல்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 72 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளது. 'பிகே' படம் போலவே 'தங்கல்' படமும் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டுமா என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது.
ஹாலிவுட் படமான 'கார்டியன்ஸ் ஆப் கேலக்சி 2' படத்துடன் 'தங்கல்' படம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.