தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுசாலமனின் கயல் படத்தில் அறிமுகமானவர் சந்திரன். அதன்பிறகு கிரகணம், ரூபா, திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கிரகணம் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இளன் இயக்கியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
மேலும், கிருஷ்ணா நெகடீவ் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் கயல்சந்திரன் பாசிட்டீவ் ரோலில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நந்தினிராய் நடித்திருக்கிறார். இவர்களுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகள் இருந்தபோதும் எந்தவித முத்தக்காட்சிகளும் இடம்பெறவில்லையாம். ஆனால் படத்தில் காமெடியனாக நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும், கயல்சந்திரனுக்குமிடையே ஒரு உதட்டு முத்தக்காட்சி படத்தில் உள்ளதாம்.
இதுபற்றி கயல் சந்திரன் கூறும்போது, பெரும்பாலும் ஹீரோ-ஹீரோயின்கள் இடையேதான் முத்தக்காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் காமெடியன் சிங்கப்பூர் தீபனுடன் ஒரு உதட்டு முத்தக்காட்சியில் நடித்துள்ளேன். அதுவும் நான் சினிமாவுக்கு வந்து நடித்த முதல் முத்தக்காட்சி இது. அதனால் இது எனக்கு மறக்க முடியாத முத்தக்காட்சியாக அமைந்துள்ளது என்கிறார்.