பாகுபலி-2 வசூல்ரூ. ஆயிரம் கோடி:ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி - bahubali collection: actor thanks
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி-2 வசூல்ரூ. ஆயிரம் கோடி:ரசிகர்களுக்கு பிரபாஸ் நன்றி

07 மே, 2017 - 19:46 IST
எழுத்தின் அளவு:
bahubali-collection:-actor-thanks

சென்னை: கடந்த 28-ம் தேதி வெளியான பாகுபலி -2 இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியான சில நாட்களிலேயே ரூ. ஆயிரம் கோடி அளவிற்கு வசூலாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதனையடுத்து பாகுபலி-2-வில் கதாநாயகனாக நடித்துள்ள நடிகர் பிரபாஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


எனது இதயத்தில் வாழும் எனதருமை ரசிகர்களுக்கு, : நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை என்னை உங்களின் அன்பு எனும் அடை மழையால் நனைய வைத்ததற்கு எந்நாளும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.


இந்தியா, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் இருந்தும் என்னை உங்களின் அளவற்ற அன்பினால் திக்குமுக்காட செய்ததற்கு நன்றி கடனாக என்னுடைய முழுத் திறமையையும் வெளிபடுத்தி உங்களை மகிழ்விக்க முயற்சி செய்துள்ளேன். அதில் வெற்றியும் கண்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர்.


என்னுடைய பாகுபலி பயணத்தில் நான் கைப்பற்றிய அம்சங்களில் முக்கியமானவர்கள் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.


பாகுபலி போன்ற பிரம்மாண்ட படைப்பில் என்னைக் கதாநாயகனாக்கி வாழ்நாள் முழுவதும் நொடிக்கு நொடி நினைத்துப் பெருமைப்படும் வாய்ப்பை அளித்த இயக்குனர் SS. ராஜமௌலி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்.


இத்தருணத்தில் பாகுபலி படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.


Advertisement
ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது - நக்மாரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது - ... இணையதளத்தில் எச்டி தரத்தில் வெளியானது பாகுபலி 2: விஷால் போலீசில் புகார் இணையதளத்தில் எச்டி தரத்தில் ...


வாசகர் கருத்து (1)

siva -  ( Posted via: Dinamalar Android App )
07 மே, 2017 - 23:39 Report Abuse
siva Brother prabaas you are came Indian No1 actor
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film manik
  • மாணிக்
  • நடிகர் : மா.க.பா.ஆனந்த்
  • நடிகை : சூசா குமார்
  • இயக்குனர் :மார்ட்டின்
  Tamil New Film Melanattu marumagan
  Tamil New Film Mom
  • மாம்
  • நடிகை : ஸ்ரீ தேவி
  • இயக்குனர் : ,ரவி உத்யவர்
  Tamil New Film Puyala Kilambi Varom

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in