'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பி.சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா கதாநாயகன், கதாநாயகியாக நடித்த தெலுங்கு படம் '100% லவ்'. 2011-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற இந்தப்படம் இப்போது தமிழில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய பி.சுகுமார் தமிழில் தயாரிக்கிறார்.
'பேக் வாட்டர்ஸ்' 'நடாஷா' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் உதவியாளராகப் பணியாற்றியவருமான எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அதோடு அவரே இசை அமைக்கிறார். 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'தில்வாலே', 'சிங்கம்' என பல ஹிந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டட்லி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் ஒரிஜினலான '100% லவ்' படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னாவையே ஜி.வி.பிரகாஷ் குமாரருக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக தமன்னாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் படமாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.