'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் மம்மூட்டி-நயன்தாரா நடித்த படம் பாஸ்கர் தி ராஸ்கல். இந்த படத்தில் அவர்களின் மகளாக குழந்தை நட்சத்திரம் அனிகா நடித்திருந்தார். இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்தவர். இப்படம் தற்போது தமிழில் அரவிந்த்சாமி-அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக்காகிக்கொண்டிருக்கிறது. சித்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அனிகா நடித்த வேடத்தில் மீனாவின் மகளான தெறி பேபி நைனிகா நடிக்கிறார்.
மேலும், தெறி படத்தில் விஜய்யுடன் என்ட்ரி கொடுத்த பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நைனிகாவை இந்த படத்தில் இன்னும் பெரிய அளவில் நடிப்பில் ஸ்கோர் பண்ண வைத்து விட வேண்டும் என்பதற்காக, ஸ்கிரிப்ட் பேப்பரை வாங்கிச்சென்று வீட்டிலேயே பயிற்சி கொடுத்திருக்கிறார் மீனா. அதையடுத்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகும் நைனிகாவின் பர்பாமென்ஸில் திருப்தி ஏற்படாத பட்சத்தில், ஸ்பாட்டிலேயே அவருக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். முக்கியமாக இந்த படத்தின் மலையாள பதிப்பில் நடித்த அனிகாவின் சாயல் நைனிகாவின் நடிப்பில் வராத வகையில் பார்த்துக் கொண்டாராம் மீனா.