ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இருதினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதேசமயம், இப்படத்தின் டீசர், அமெரிக்க படமான லிட்டில் பாய்-யின் காப்பி போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், படக்குழுவே டியூப்லைட் படம், லிட்டல் பாய் படத்தின் தழுவல் தான் என்று கூறியுள்ளனர். லிட்டில் பாய் படம் இண்டாம் உலகப்போர் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. அதேப்போன்று டியூப்லைட் படமும் போர்கள காட்சியின் பின்னணியில் தான் உருவாகியிருக்கிறது. அதோடு இந்தப்படத்தில் ஒரு சிறுவனை மையப்படுத்தி தான் கதை நருகிறது. லிட்டில் பாய் படத்தின் கதையும் அப்படியே என்பது குறிப்பிடத்தக்கது. டியூப்லைட் படம் வருகிற ரம்ஜான் பண்டிகையின் போது ரிலீஸாக இருக்கிறது.