நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கடந்த வருடம் தொடங்கப்பட்ட படம் தனுஷுக்கும் கௌதம் மேனனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முடங்கிக் கிடந்தது. பின்னர் இருவரும் சமாதானமானதை அடுத்து மீண்டும் பட வேலைகள் தொடங்கப்பட உள்ளன.
மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் இப்போது ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதற்காக சுனைனாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏறக்குறைய 90 சதவிகிதம் முடிவடைந்தநிலையில் சுனைனாவை ஒப்பந்தம் செய்திருப்பதால் நிச்சயமாக அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருக்காது என்று படத்துறையில் பேச்சு அடிபடுகிறது.
சில காட்சிகளில் மட்டும் தலையைக்காட்டு சிறு வேடமாக இருக்க வேண்டும் அல்லது பாடல்காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடுகிற வேடமாக இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்கள். எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழுவினரிடம் விசாரித்தால், பாடல்காட்சியில் அயிட்டம் டான்ஸ் ஆடுவதற்குத்தான் சுனைனாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
இதற்கிடையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில்.... இரண்டு பாடல்களையும் வெளியிட்டுவிட்ட பிறகும் படத்திற்கு யார் இசை அமைப்பாளர் என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர். கௌதம் மேனன் இசையமைத்திருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.