தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிஷ்கினின் கனவுப்படம் என்று கூறப்படும் முகமூடி படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஜீவா - பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்க, மிஷ்கின் இயக்கும் இந்த பெரிய பட்ஜெட் படம், இதுவரை தமிழில் யாரும் மேற்கொள்ளாத ஒரு பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேட்மேன், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போல ஒரு சாகஸப் படமாக உருவாகிறது முகமூடி.
சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் நடிகர் ஜீவா, நடிகை பூஜா ஹெக்டே உள்பட பலரும் பங்கேற்றனர். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. ஏராளமான துணை நடிகர்கள் குங்பூ சீருடையில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டைரக்டர் மிஷ்கின், "முகமூடி கதையை வைத்துக் கொண்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேல் சரியான ஹீரோவைத் தேடி அலைந்திருக்கிறேன். கடைசியில் ஜீவாதான் அந்தக் கதைக்கு பொருத்தமாக அமைந்தார். இந்தப் படத்தில் நடிக்க குங்பூ கற்க வேண்டியிருக்கும் என்று நான் சொன்னபோது, ஏற்கெனவே 2 ஆண்டுகள் குங்பூ கற்றதாக அவர் தெரிவித்தார். அப்போதே இவர்தான் சரியான ஹீரோ என முடிவு செய்துவிட்டேன். ஜீவா மட்டும் 90 நாட்கள் எனக்கு தொடர்ந்து கால்ஷீட் கொடுத்தால் இந்தப் படத்தை வரும் கோடையில் நிச்சயம் வெளியிட்டு விடுவேன், என்றார்.