ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தயாரிப்பாளராக இருந்து ஹீரோவாகியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ், தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுமாகி இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மன்னாரு படத்தை இயக்கிய எஸ்.ஜெய்சங்கர் இயக்கும் வேட்டைநாய் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் பகுதியில் நடந்து வருகிறது. ஆர்.கே.சுரேசும், வில்லனாக நடிக்கும் விஜய் கார்த்திக்கும் மோதிக் கொள்வது போன்ற காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. தீபந்தங்களை கொண்டு இருவரும் சண்டையிட்ட காட்சியை சண்டை இயக்குனர் நாக்அவுட் நந்தா இயக்கினார். ஒரு வீட்டுக்குள் இருவரும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தபோது தீ கங்கு பட்டு அந்த வீடு எரிய ஆரம்பித்தது. இதனால் அனைவரும் பதறி அடித்து வெளியே வந்தனர். ஆர்.கே.சுரேஷ் படக்குழுவினரை பத்திரமாக வெளியே அனுப்பி வைத்துவிட்டு கடைசியா வெளியில் வந்தார். அவருக்கு உடலின் பல பாகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
சிகிச்சைக்காக ஆர்.கே.சுரேஷ் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது. ஓரிரு நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.