தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் விவேகம். இப்படத்தின் முதல் பார்வையும், படத்தின் தலைப்பும் பிப்ரவர் 2ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முதல் பார்வையில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித் ரசிகர்கள், அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் டீசர் வெளியிடப்படவில்லை. பல்கேரியாவில் தொடர் படப்பிடிப்பு நடைபெறுவதால்தான் டீசர் அப்போது வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவித்தன. விரைவில் பல்கேரியாவில் படப்பிடிப்பு முடிந்து குழுவினர் இந்தியா திரும்ப உள்ளனர்.
முதல் பார்வையை வெளியிட்ட பிறகு கடந்த சில மாதங்களாக அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார் இயக்குனர் சிவா. நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள டீசர் வெளியீட்டு அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். மே 18ம் தேதி வியாழக்கிழமை, வழக்கம் போல 12.01 மணிக்கு விவேகம் படத்தின் டீசர் வெளியாக உள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 05) விவேகம் படத்தின் டீசரை முன்கூட்டிய வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு அறிவித்து மே 18 ம் தேதிக்கு பதிலாக மே 11 ம் தேதி டீசர் வெளியிட பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அன்றைய தினம் பாகுபலி 2 படத்தின் டிரைலர் சாதனையையும் மிஞ்சும் அளவிற்கு ஒரு சாதனையை எதிர்பார்த்து காத்திருக்கலாமா அஜித் ரசிகர்களே...