பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரீகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் ரீகாவுடன் வந்த அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ரீகாவின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரீகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், சந்தீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரீகாவும் மர்மமான முறையில் இறந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.