ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹர ஹர மகாதேவகி, பக்கா, டீம் 5, நெருப்புடா உட்பட, அரை டஜன் படங்கள், நிக்கி கல்ராணியின் கைவசம் உள்ளன. 'காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்ள வேண்டும்' என்ற விஷயத்தில் உடும்பு பிடியாக இருக்கிறார் நிக்கி. அதிக படங்களில் நடித்தால் தான், முன்னணி நடிகையாக முடியும் என யாரோ, அவரிடம் கூறியிருப்பர் போலிருக்கிறது. அதனால், 'கால்ஷீட்' கேட்டால், உடனே சம்மதித்து, படப்பிடிப்புக்கு தயாராகி விடுகிறார். சினிமாவை தவிர, மற்ற விஷயங்களிலும், ஆர்வம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் நிக்கி. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு, முக்கிய நடிகர்கள்
மட்டுமே நன்கொடை கொடுத்துள்ள நிலையில், நிக்கி கல்ராணி, மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.