பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தூம் படங்களின் வரிசையில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் உதய் சோப்ரா. இவரும், நடிகை நர்கீஸ் பக்ரியும் சமீபகாலமாக ஒன்றாக சுற்றி திரிகின்றனர். சமீபத்தில் ஏர்போர்ட்டில் இருவரும் ஒன்றாக கைகோர்த்து செல்வது போன்ற போட்டாக்கள் வெளியாகின. இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி நர்கீஸின் காதுக்கு எட்டியபோது கோபம் அடைந்துவிட்டார் நர்கீஸ்.
இதுகுறித்து நர்கீஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... "அருமை, நல்ல காதல் கதையை கட்டி விடுகிறார்கள். யார் இது போன்ற வதந்தியை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. நான் யாரையாவது திருமணம் செய்ய எதற்காக இப்படி செய்கிறீர்கள்" என்று கூறியுள்ளார்.
தற்போது நர்கீஸ், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் உருவாகி வரும் பான்ஜோ படத்தில் நடித்து வருகிறார்.