ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இர்பான் கான், சபா ஓமர் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் ஹிந்தி மீடியம். சாகேத் சவுத்ரி இயக்க, தினேஷ் விஜன் மற்றும் பூஷண் குமார் தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஹிந்தி மீடியம் அடுத்தவாரம் வெளியாவதாக இருந்தது. இப்போது ஒருவாரம் தள்ளிப்போய் மே 19ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
இதுகுறித்து ஹிந்தி மீடியம் படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், "ஹிந்தி மீடியம் படத்தை பார்த்துவிட்டு நானும், இர்பான் கானும் படத்தை மேலும் ஒருவாரம் இன்னும் நன்றாக படத்தை புரொமோஷன் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணினோம். இந்தப்படம் அவ்வளவு அருமையாக வந்துள்ளது, நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக ஹிந்தி மீடியம் இருக்கும்" என்றார்.