ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் பிருத்விராஜ் நடிக்க வரும் முன்பே சினிமாவில் நுழைந்தவர் தான் அவரது அண்ணன் இந்திரஜித். ஆனால் பிருத்விராஜை போல, நடித்தால் ஹீரோ என்கிற நிலையை எல்லாம் வளர்த்துக்கொள்ளாமல், தனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஒகே செய்து அதில் அப்ளாஸ் வாங்கி வருகிறார் இந்திரஜித். பல வருடங்களுக்கு முன் தமிழில் தான் இயக்கிய 'என் மன வானில்' படத்தில் இவரை நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் வினயன்.. அதுதான் இந்திரஜித் நடித்த முதல் தமிழ் படம்..
அதன்பின் பத்து வருடங்களுக்கு முன் இயக்குனர் விஷ்ணுவர்தன், தான் இயக்கிய 'சர்வம்' படத்தில் ஆர்யாவின் நண்பனாக இந்திரஜித்தை நடிக்க வைத்து மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது தம்பி பிருத்விராஜூக்கு தமிழில் முதல் படத்திலேயே கிடைத்த வரவேற்பு இவருக்கு இந்த படங்களில் கொஞ்சம் கூட கிடைக்காமல் போனது. அந்த குறையை நீக்கும் விதமாக 'துருவங்கள் பதினாறு' கார்த்திக் நரேன் இயக்கும் 'நரகாசுரன்' படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் இந்திரஜித். இந்தப்படம் இவருக்கு தமிழில் தடையில்லா பயணத்தை தொடர வகை செய்யும் என நம்பலாம்.