ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ரஜினி படங்களில் இடம்பெறும் பஞ்ச் டயலாக்குகள் போன்று விஜய், அஜித் படங்களில் இடம்பெறும் பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அதனால் அவர்களை வைத்து படம் இயக்குபவர்கள், ரசிகர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு ஆங்காங்கே பஞ்ச் டயலாக்குகளை இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் விவேகம் படத்தை இயக்கி வரும் சிவா, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிக்ஸ்பேக் அஜித்தை கண்பித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல், படத்திலும் ரசிகர்கள் இன்னும் இன்ப அதிர்ச்சியடையும் வகையில் பல காட்சிகளில் அதிரடியான பஞ்ச் டயலாக்குகளையும் அஜித்தின் அனுமதியுடன் இணைத்துள்ளாராம்.
அதில், ஒரு காட்சியில் வில்லன்களைப் பார்த்து ஆவேசமாக பேசும் அஜித், "என்னை தோற்கடிக்கனும்னு எல்லோரும் நினைக்கிறாங்க. ஆனால் நான் தோற்கணுங்கிறதகூட நான்தான் முடிவு செய்வேன். இன்னொருத்தர் முடிவு செய்ய விடமாட்டேன்" என்று பேசியுள்ளாராம். இதற்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் சிவா.