'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
மும்பையை சேர்ந்தவரான தமன்னா தென்னிந்திய சினிமாக்களில் நடித்துக்கொண்டே தாய்மொழியான இந்தியிலும் அழுத்தமான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்தார். என்றாலும், அவர் இந்தியில் நடித்த ஹம்சகல், ஹிம்மத்வாலா, படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் தென்னிந்திய படங்களை கெட்டியாக பிடித்துக்கொண்ட தமன்னாவுக்கு பிரபுதேவாவுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்த தேவி படம் இந்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், இரண்டு புதிய இந்தி படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, தமிழில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர்காலம் இந்தி பதிப்பில் நயன்தாரா வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. அதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்தி சினிமாவிலும் கனவு கன்னியாகி விட வேண்டும் என்று தொடர்ந்து மும்பையில் முகாமிட்டு கதைகள் கேட்டு வரும் தமன்னா, கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கனமான கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து வருகிறாராம்.