'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பேய் பட சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதுமண தம்பதிகளை சேர விடாத பேய் தமிழ் சினிமாவில் நூற்றுக் கணக்கில் வந்து விட்டது. இப்போது 101வது பேய் மங்களாபுரம் என்ற படத்தில் வர இருக்கிறது. இதனை புதுமுகங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் சார்பில் ஜி.கோபால்சாமி தயாரிக்கும் இந்தப் படத்தை புதுமுகம் கோபால் இயக்குகிறார். யாவகன், சிவகுரு ஹீரோக்களாக நடிக்க காயத்ரி, கமலி ஹீரோயினாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர அஜய்ரத்னம், டெல்லி கணேஷ், பேபி தர்ஷினி, மகதி ஆகியோரும் நடிக்கிறார்கள். கார்த்திகேயன் மூர்த்தி இசை அமைக்கிறார். திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு செய்கிறார்.
"புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவுக்கு குடியேறுகிறார்கள். அந்த பங்களாவுக்குள் அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்யா சக்தி தடுக்கிறது. அந்த அமானுஷ்யா சக்தி யார்? இளம் காதலர்கள் வென்றார்களா ? அமானுஷ்யா ஷக்தி வென்றதா என்கிற பரபரப்பான திரைக்கதைதான் மங்களாபுரம் “ மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு.படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது படம் இம்மாதம் வெளியாகிறது" என்கிறார் இயக்குனர் கோபால்.