ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், வாஞ்சிநாதன் என பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக்ராஜா. வேகமாக வளர்ந்து வந்த அவர் ஒருகட்டத்தில் மார்க்கெட்டில் பின்தங்கினார். என்றாலும், தனது தந்தை இளையராஜாவின் இசைப்பணிகளில் கவனத்தை திருப்பினார். அதேசமயம் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களுக்காகவது இசையமைத்து வந்த கார்த்திக்ராஜா, தற்போது விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள படைவீரன் படத்திற்கு இசைய மைத்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் தனது தம்பியான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை ஒரு பாடல் பாட அழைத்திருக்கிறார் கார்த்திக்ராஜா. அப்போது அந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ள மற்ற பாடல்களையும் கேட்ட யுவனுக்கு, பாடல்கள் ரொம்பவே பிடித்து விட்டதாம். அதனால் இந்த படத்தின் பாடல்களை எனது யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலமே வெளியிடுகிறேன் என்று ஆடியோ ரைட்ஸை வாங்கிக்கொண்டாராம் யுவன் ஷங்கர் ராஜா. தனது பட ஆடியோவை தம்பி யுவனே வாங்கியிருப்பது கார்த்திக்ராஜாவுக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாம்.