தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1955ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த படம் குலேபகாவலி. நடிகை டி.ஆர்.ராஜகுமாரி பல படங்களை தயாரித்து அதில் நஷ்டம் ஏற்பட்டு பெரும் பொருளாதார சிக்கலில் இருந்த போது அவருக்கு உதவுவற்காக எம்.ஜி.ஆர் நடித்துக் கொடுத்த படம். இதில் எம்.ஜி.ஆர் ஜோடியாக டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோச்சனா, ஜி.வரலட்சுமி, என நிறைய ஹீரோயின்கள் பட்டாளம் இருந்தது.
இப்போது இதே குலேபகாவலி டைட்டிலில் பிரபுதேவா நடிக்கிறார். இதில் காமெடி பட்டாளம் இருக்கிறது. காமெடி படமான இதில் பிரபுதேவாவுடன் மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், சத்யன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் காமெடி ரோலில் நடிக்கிறார்கள்.
எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹன்சிகாவை கொண்டு வந்த பிரபுதேவா, இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். நயன்தாரா நடிக்கும் அறம் படத்தை தயாரிக்கும் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.கல்யாண் இயக்குகிறார். இது பிளாக் வகை காமெடி படம். முதல்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் பாங்காக்கில் நடக்கிறது.