நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
கடந்த வருடம் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான 'புலி முருகன்' படத்தை தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் டப்பிங் செய்து கடந்த டிசம்பர் ஆரம்பத்தில் ரிலீஸ் செய்தார்கள். ஆந்திரா, தெலுங்கானா இரண்டிலும் சேர்த்து சுமார் 350 தியேட்டர்களில் 'மான்யம் புலி' ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப்படத்திற்கு தெலுங்குப் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு போல பிரமாண்ட வரவேற்பு கொடுத்து முதல் நாளே ஹவுஸ்புல் காட்சிகளாக்கினார்கள் ரசிகர்கள்.
அந்த வரவேற்புடன் 50 நாட்கள் ஓடிய 'மான்யம் புலி' சுமார் 12 கோடி ரூபாயை தெலுங்கில் வசூலித்தது.. இப்போது லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால் வரும் மே-6ஆம் தேதி இந்தப்படத்தை மீண்டும் தெலுங்கில் மறு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். காரணம், இந்தப்படம் தெலுங்கில் வெளியானபோது மக்களிடம் வரவேற்பு இருந்தாலும், பிரதமர் அறிவித்த செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் இன்னும் அதிகப்படியான வசூலை ஈட்ட முடியாமல் போய்விட்டதாம்.. அதனால் இப்போது கோடை விடுமுறை என்பதால், இந்த சமயத்தில் வெளியிட்டால் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைக்கும் என்று கருதியே இந்தப்படத்தை மறு ரிலீஸ் செய்கிறார்களாம்.
இதே 'புலி முருகன்' தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வரும் மே-19ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.