பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கமல்ஹாசன் நடிப்பு, இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். படத்தின் இரண்டாம் பாகம் அந்தாண்டு இறுதியில் வெளிவரும் என்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே முதல்பாகம் இயக்கியபோதே இரண்டாம் பாகத்திற்கான முக்கால்வாசி படப்பிடிப்புகளை நடத்திவிட்டார் கமல்.
விஸ்வரூபம் கொடுத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க முன்வந்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் விஸ்வரூபம் 2 படம் முடங்கி போனது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு விஸ்வரூபம்-2 பிரச்னை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இருவாரங்களுக்கு முன்னர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் துவங்கிவிட்டதாகவும், இந்தாண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. இந்தநிலையில் விஸ்வரூபம்-2 படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார்.
இதுப்பற்றி கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணியளவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என்பதை மிகழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று என்று கூறியிருந்தார்.
அதன்படி விஸ்வரூபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல் வௌியிட்டார்.