ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நதியா பிரபல நடிகையாக இருந்தபோது அவர் படங்களில் அணிந்து நடித்த கம்மல், வளையல் உள்ளிட்ட பல பொருட்கள் பெண்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தன. அதேப்போன்று கம்மல், வளையல்கள் பின்னர் கடைகளில் விற்பனைக்கு வந்தன. அதேநிலை குஷ்பு நடித்த போதும் இருந்தது. அதேபோல், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது அந்த படங்களில் அவர்கள் அணிந்து நடிக்கும் டீசர்ட் போன்ற பல பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இந்திய அளவில் தற்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி-2 படத்தில் பிரபாஸ்-அனுஷ்கா இடம்பெற்றுள்ள போட்டோவை சேலைகளில் வடிவமைத்து பாகுபலி-2 சேலைகள் என்று இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய ஜவுளி கடைகள் விற்பனைக்கு விட்டுள்ளன. இந்த சேலைகளை பெண்கள் உடுத்தியிருப்பது போன்ற புகைப்படங்களும் இணையதளங்களில் வலம்வரத் தொடங்கியுள்ளன.