ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த முத்து படம் ஜப்பானில் திரையிடப்பட்டு பெரிய அளவில் வசூல் செய்தது. அதனால் அதன்பிறகு ரஜினி நடித்த பல படங்கள் ஜப்பானிலும் திரையிடப்பட்டு வருகின்றன. அதோடு, அவருக்கு ஜப்பானில் நிறைய ரசிகர்கள் இருப்பதால், அவரது ஒவ்வொரு படங்களும் அங்குள்ள சில முக்கிய தியேட்டர்களில் வெளியாகும்போது உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.
அந்தவகையில், ரஜினியின் கபாலி படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட வேண்டும் என்பது அங்குள்ள அவரது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வந்தது. அதனால், கடந்த சில மாதங்களாக அதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் இன்று ஜப்பானில் மே 2-ந்தேதி ஓஸாகாவில் கபாலி படம் ரிலீஸாகிறது.