டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பாகுபலி 2', இந்தப் பெயர் இன்னும் மிச்சமிருக்கும் சாதனைகளையும் முறியடிக்கும் வரை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். இந்தியத் திரையுலகில் உள்ள பல சரித்திர சாதனைகளை 'பாகுபலி 2' படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் முறிடியத்துக் கொண்டிருக்கும், முறியடிக்கப் போகும் சாதனைகளை அடுத்து எந்தப் படத்தால் முறியடிக்க முடியும் என்பதுதான் இப்போது பலருடைய கேள்வியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு நேரடிப் படங்கள் என்று சொல்லப்பட்டாலும், தமிழில் பல காட்சிகளில் தெலுங்கு உதட்டசைவே உள்ளது. அதனால், தமிழிலும் பாதி டப்பிங், பாதி நேரடிப் படம் என்றுதான் சொல்ல வேண்டும். மலையாளத்தில், ஹிந்தியில் இப்படம் முழுமையான டப்பிங் படமாகவே வெளியாகி உள்ளது.
பொதுவாக திரையுலக சாதனைகளில் நேரடிப் படத்தின் சாதனைகளை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். டப்பிங் படமாக இருந்தால் அந்தப் படங்களின் சாதனையையும், ஏன் அந்தப் படத்தையே அந்த ஆண்டில் வெளியான அந்தந்த மொழிப் படங்களின் பட்டியலில் கூட சேர்க்க மாட்டார்கள்.
ஹிந்தி, மலையாளத்தைப் பொறுத்தவரை நேரடிப் படங்கள் கொடுத்த வசூலை 'பாகுபலி 2' படம் வெளியான சில நாட்களிலேயே முறியடித்துவிட்டது. வேற்று மொழிப் படம் ஒன்று தங்கள் மாநிலத்தில் வந்து சாதனை புரிந்ததை அந்த மாநிலக் கலைஞர்கள் வெளிப்படையாகப் பாராட்டினாலும் உள்ளுக்குள் ஆதங்கத்துடன்தான் இருப்பார்கள்.
முதல் நாள் வசூல், முதல் வார இறுதி வசூல் என மாநில ரீதியான வசூல், நாடு முழுமைக்குமான வசூல், ஒவ்வொரு வெளிநாடுகளுக்கான வசூல் என தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலுமே 'பாகுபலி 2' நிகழ்த்தி வருகிறது. இப்படம் நிகழ்த்தி முடிக்கப் போகும் சாதனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க மேலும் சில மாத காலம் ஆகலாம். அதுவரை, அவ்வப்போது கிடைக்கப் பெறும் சாதனைகளே பரபரப்புடன் இருக்கும்.