'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் தான் ஆசிக் அபு... இவர் இயக்கிய சால்ட் அன்ட் பெப்பர், 22 பீமேல் கோட்டயம் ஆகிய படங்கள் தமிழில் முறையே 'உன் சமையலறையில்', 'மாலினி 22 பாளையங்கோட்டை' என்கிற பெயரில் ரீமேக்காகி இருக்கின்றன.. இவர் இயக்கிய சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் தயாரிப்பாளர் சதானந்தன்.. இந்தப்படத்திற்காக கேரள அரசின் சிறந்த தயாரிப்பாளர் விருதையும் பெற்றுள்ளார் சதானந்தன். ஆனால் இவர் பயங்கரமான ஏமாற்று பேர்வழி என்றும் இவரை யாரும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆசிக் அபு.
இந்த சதானந்தன் தனது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக ரதீஷ் கிருஷ்ணா என்பவரிடம் சுமார் நான்கு லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளாராம். இதனால் சதானந்தன் மீது போலீசில் புகார் அளித்த ரதீஷ், தான் ஏமாந்த விபரம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.. இதை பார்த்த ஆசிக் அபு, தான் சதானந்தன் தயாரித்த 'சால்ட் அன்ட் பெப்பர்' படத்தை இயக்கியபோதே அவர் மற்றவர்களை ஏமாற்றி எப்படி காசு பறிப்பார் என்பதை கண்கூடாக பார்த்ததாகவும் இவர் வாய்ப்பு தருவதாக கூறினால் மற்றவர்கள் அவரிடம் உஷாராக நடந்துகொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.