தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துல்கர் சல்மான் நடிப்பில் அமல் நீரத் இயக்கியுள்ள படம் தான் 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா'. சுருக்கமாக 'சி.ஐ.ஏ'.. இந்தப்படத்தில் போராளி குணம் கொண்ட மாணவராக நடித்துள்ளார் துல்கர் சல்மான். அறிமுக கதாநாயகியாக கார்த்திகா முரளிதரன் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் மே-5ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான ரசிகர்மன்ற டிக்கெட் விற்பனை இப்போதே சூடுபிடித்துள்ளது. இதிலும் ஒரு புதுமையாக திருவனந்தபுர மாவட்ட ரசிகர் மன்றத்தின் சார்பாக விநியோகிக்கப்படும் 'சி.ஐ.ஏ' படத்தின் முதல் டிக்கெட்டை துல்கரின் நெருங்கிய நண்பர்களான காமெடி நடிகர் ஜேக்கப் கிரிகேரி மற்றும் நடிகர் சன்னி வெய்ன் இருவரும் பெற்றுள்ளனர்.
துல்கர் சல்மான் அறிமுகமான 'செகண்ட் ஷோ' படத்தில் அறிமுகமான இன்னொரு நடிகர்தான் சன்னி வெய்ன்.. இந்தப்படத்தின் மூலம் நட்பான இவர்கள் அடுத்ததாக 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி', 'கம்மட்டிப்பாடம்', 'ஆன் மரியா களிப்பிலானு' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். ஏபிசிடி' படத்தில் துல்கர் சல்மானோடு சேர்ந்து காமெடியில் அதகளம் பண்ணியவர் ஜேக்கப் கிரிகேரி. அப்படியே துல்கருடன் 'சலாலா மொபைல்ஸ்', '100 டிஸ் ஆப் லவ்', சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' ஆகிய படங்களில் துல்கருடன் தொடர்ந்து நடித்துள்ளார்.
நண்பரின் படத்தை புரமோட் செய்யும் விதமாகத்தான் இவர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கான முதல் டிக்கெட்டை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.