Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: யு.ஆர்.ஜீவரத்தினத்தை கைவிட்ட எம்.ஜி.ஆரும், சிவாஜியும்

01 மே, 2017 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-ur-jeevarathinam-suffered,

பழம்பெரும் நடிகை யு.ஆர்.ஜீவரத்தினம், சென்டரல் ஸ்டூடியோவில் மேலாளராக இருந்த ரி.எஸ்.வெங்கடசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் இவர் சொந்தமாக மெர்க்குரி பிலிம்ஸ் என்ற திரைப்படக் கம்பெனியை உருவாக்கி அதன் மூலம் 1954-ஆம் ஆண்டு 'போன மச்சான் திரும்பி வந்தான்' என்ற படத்தை முதன்முதலாக தயாரித்தார். இந்தப் படம் ஜீவரத்தினத்திற்கு லாபம் தராவிட்டாலும் நஷ்டம் உண்டாக்கவில்லை. இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான 'வாழ்விலே ஒரு நாள்' படத்தில் சிவாஜிகணேசனும் ஜி.வரலட்சுமியும் இணைந்து நடித்தனர். இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான ஜீவரத்தினம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முன் போய் நின்றார்.


எம்.ஜி.ஆரை வைத்து சிரிக்கும் சிலை என்றொரு படத்தைத் தயாரித்தார்.. இதில் பானுமதி நாயகி, ஸ்ரீதர் இயக்கம். கதை, வசனம், பாடல்களை கண்ணதாசன் எழுதுவதாக முடிவானது, என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார். அந்த படம் ஆரம்பகட்ட அளவிலேயே நின்று விட்டது. நடித்து சம்பாதித்த பணம் அனைத்தையும் பட தயாரிப்பில் இழந்தார் யு.ஆர்.ஜீவரத்தினம். ஸ்ரீதர் படத்தை இயக்க எம்.ஜி.ஆர் இயக்கம் மேற்பார்வையாளராக இருந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டது. ஜீவரத்தினத்திற்காக சிவாஜி நடித்த படம் நஷ்டத்தை கொடுத்தது. எம்.ஜி.ஆர் நடித்த படம் பாதியில் நின்றது. ஏதோ ஒரு வகையில் இருவருமே ஜீவரத்தினத்தை கைவிட்டார்கள்.


Advertisement
அஜித் படைத்த வரலாறு : பிறந்தநாள் ஸ்பெஷல்!அஜித் படைத்த வரலாறு : பிறந்தநாள் ... ஒரே நேரத்தில் 8 படங்கள்: டாப் கீயரில் அமலாபாலின் திரைப் பயணம் ஒரே நேரத்தில் 8 படங்கள்: டாப் கீயரில் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா
    Tamil New Film thirupathisamy kudumbam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in