Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் படைத்த வரலாறு : பிறந்தநாள் ஸ்பெஷல்!

01 மே, 2017 - 10:07 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Ajith---Birthday-special

தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை அஜித். சில நட்சத்திரங்கள் உருவாக்கப்படுவார்கள், சில நட்சத்திரங்கள் தானாக உருவாவார்கள். அஜித் இரண்டாவது ரகம். எந்த பின்புலமும் இல்லாமல் தன் திறமை, உழைப்பு, நம்பிக்கை இவற்றையே மூலதனமாக கொண்டு இன்று புகழின் உச்சியில் இருப்பவர் அஜித். இன்று அவருக்கு 46வது பிறந்த நாள் அவர் கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கலாம்...


ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில், பாலக்காடு சுப்ரமணிய அய்யருக்கும் சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினிக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். ஐதராபாத்தில் பிறந்திருந்தாலும், சென்னையில் வளர்ந்தார். ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கியவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மனது ஓடியது. யாரும் செய்யாத ஒன்றைச் செய்து சாதிக்க வேண்டும் என்கிற வெறிதான் இருந்தது.


தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர் பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தொழில் என்று தேர்ந்தெடுத்தார், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், நண்பர்களின் யோசனைப்படி ரிச் பாயாக மாறினார். அஜித்தின் வசீகர தோற்றமும், வித்தியாசமான குரலும் அவரை மீடியாவின் பக்கம் இழுத்தது. மாடலிங், விளம்பர படம், என்று திரிந்த அவரை திரையுலகம் சுண்டி இழுத்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான துண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் பைக் ரேஸா, சினிமாவா என்ற கேள்வி வந்தபோது சினிமா என்று தீர்மானித்தார்.


1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜித் , அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பு நழுவியது. பின்னர், 1992ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் அவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருதைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். அஜித்தின் சினிமா பயணம் தொடர்ந்தது. 1995ல் வெளிவந்த ஆசை அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.


அதன் பிறகான அவரது திரைப்ப பயணத்தில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தது, பைக் ரேஸில் கலந்து கொண்டு நேர்ந்த விபத்து உட்பட உடல் முழுவதும் 23 இடத்தில் ஆபரேஷன் நடந்தது. சிகிச்சைக்காக ஓய்வு பெற்றபோது உடல் எடை கூடியது. இனி அஜித் அவ்வளவுதான் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ஒரு ஆண்டு இடைவெளியில் உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக திருப்பதி படத்திற்கு வந்து நின்றபோது எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள்.


மொழு மொழு முகத்துடன் ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்போது தாடி டிரண்ட்டை மீண்டும் தொடங்கி வைத்தது அஜித் தான். கருப்பு முடி, முடியில்லாவிட்டால் விக் வைத்து எல்லோரும் நடித்துக் கொண்டிருந்தபோது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்து அசத்தியவரும் அஜித் தான். வீட்டை மறந்து உழைப்பை மறந்து எதிர்காலத்தை மறந்து போஸ்டர் ஒட்டுவதிலும், பேனர் வைப்பதிலும் ஆர்வம் காட்டி ரசிகர் மன்றம் என்ற போர்வையில் திரியும் இளைஞர்களால் எதிர்காலம் பாழாகிவிடும் என தனது ரசிகர் மன்றத்தை கலைத்த ஒரே கலைஞன் அஜித். தன்னிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுத்த ஒரே கலைஞன் அஜித். இப்படி அவரது பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம்.


அஜித் வெறும் நடிகர் மட்டுமல்ல நல்ல குடும்பத் தலைவன், நல்ல தந்தை, நல்ல கணவன். எல்லாவற்றுக்கும் உதாரணமாக இப்போதும் திகழ்கிறார். சினிமா தவிர்த்து கார் ரேஸ், பைக் ரேஸ் என விளையாட்டு உலகிலும் வலம் வருகிறார். தன் மனைவியையும் பேட்மிட்டன் வீராங்கணையாக்கி அழகு பார்க்கிறார். வருமானவரித்துறை நுழையாத ஒரே ஹீரோவின் வீடு அஜித் வீடு. அரசாங்கம் மிரட்டி விழாவுக்கு நடிகர்களை அழைக்கிறது என்று ஒரு முதல்வரை முன்னால் உட்காரவைத்து பேசிய துணிச்சல் அஜித்தினுடையது. பாஸ்போர்ட் அலுவலகமா, விமான நிலையமா? வாக்குசாவடியாக மக்களுடன் மக்களான நின்று தன் கடமையை செய்கிற நடிகர்.


இன்று அவரது பிறந்தாள். அவருக்கு நம் வாழ்த்துக்கள். வாசகர்களாகிய நீங்களும் வாழ்த்தலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in