தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2017ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் பிரவின். தேசிய விருது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆதிஷ் "எனக்கு தேசிய விருது வாங்க வேண்டும் என்பதை விட இளைய தளபதி விஜய்யை பார்க்க வேண்டும் என்பதுதான் வாழ்நாள் லட்சியம்" என்று கூறினான்.
இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. விஜய்க்கு கேரளாவில் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தாலும் ஒரு குழந்தை நட்சத்திரத்தின் ஆசை எல்லோரையும் வியப்படையச் செய்தது. இந்த தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. அவர் ஆதிஷை சந்திக்க விரும்பினார். அப்போது அட்லி படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் படப்பிடிப்பு முடிந்தவுடன் சந்திப்போம் என ஆதிஷ§க்கு தகவல் அனுப்பினார்.
அதன்படி தற்போது படப்பிடிப்பின் இடைவெளியில் ஓய்வில் இருக்கும் விஜய் ஆதிஷை தன் வீட்டுக்கு வரவழைத்தார். பெற்றோருடன் வந்த ஆதிஷ் விஜய்யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் மலையாளத்தில் பேசினார். விஜய்யும் மலையாளத்தில் பேசினார். "உங்களைப் போல நானும் பெரிய ஹீரோவாக வரவேண்டும்" என்றான் ஆதீஷ். "கடுமையான உழைப்பும், திறமையும் இருந்தால் கண்டிப்பாக வருவாய். ஆனாலும் படிப்பை விட்டு விடாதே அது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்" என்று அறிவுரை சொன்னார். அதன்பிறகு விஜய்யுடன் சிற்றுண்டி அருந்திவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு கேரளா கிளம்பிச் சென்றார் ஆதிஷ். மேலும் பல விருதுகள் பெற்று சாதனை படைக்க வாழ்த்தி அனுப்பி வைத்தார் விஜய்.