மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அஜீத்தின் விவேகம் படத்தில் அதிரடியான வில்லனாக நடித்து வருபவர் இந்தி நடிகர் விவேக் ஓபராய். பல்கேரியாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் அஜீத்துடன் நடித்து வருகிறார். அவர், அங்குள்ள சீதோஷ்ணத்தை குறிப்பிட்டு, இங்கு குளிர் தாங்கவில்லை. அதனால் உங்களது அன்பையும், சூரிய வெளிச்சத்தையும் கொஞ்சம் அனுப்பி வையுங்கள் என்று தனது டுவிட்டரில் அஜீத் ரசிகர்களை கேட்டுக்கொண்டிருந்தார்.
அதையடுத்து தற்போது தனது டுவிட்டரில், விவேகம் படப்பிடிப்பு மேற்கு பல்கேரியாவில் பனி சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும், ஒரு நீச்சல் குளத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கும் விவேக் ஓபராய், இந்த நீச்சல் குளத்தில் குளிக்கிற தைரியம் யாருக்காவது உள்ளதா? என்றும் கேட்டுள்ளார். இந்த புகைப்படத்தை அஜீத் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.