இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'ரோமியோ ஜூலியட்', 'கத்திசண்டை', 'வீரசிவாஜி' ஆகிய படங்களை தயாரித்த 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' எஸ்.நந்தகோபால் அடுத்து தயாரிக்கும் படம் '96'.
விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் முதன் முதலாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்தை அறிமுக இயக்குனர் சி.பிரேம்குமார் இயக்குகிறார்.
இவர் விஜய்சேதுபதிக்கு மார்க்கெட் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் இவர். 96 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இதுவரை படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் கும்பகோணம் பகுதியில் நடைபெறுகிறது.
படப்பிடிப்பு தொடங்கம் நாள் நெருங்கிவிட்ட நிலையிலம், இப்படத்தில் சிறுவயது விஜய்சேதுபதி, த்ரிஷா வேடத்தில் நடிப்பவர்கள் இன்னும் தேர்வாகவில்லை. மேலும் சில கதாபாத்திரிங்களில் நடிக்க உள்ள நடிகர், நடிகை தேர்வும் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்கவில்லை. என்.சண்முகம் ஒளிப்பதிவு செய்கிறார்.