புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தமிழ் சினிமாவில் விறுவிறுவென பல படங்களில் நடித்து முன்னணி நடிகையான ஹன்சிகாவிற்கு, ஜெயம்ரவியுடன் நடித்த போகன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லை. ஒரு மலையாள படத்தில் நடிக்க பேசினார் ஹன்சிகா. ஆனால் அது ஒர்க்அவுட்டாகவில்லை. இதனால் மும்பையில் போய் செட்டிலாகி விட்டார்.
இந்த நிலையில், தேவி படத்தை அடுத்து யங் மங் சங் படத்தில் நாயகனாக நடித்து வரும் பிரபுதேவா, அதையடுத்து கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பில் வில்லனாக நடிக்கிறார். அதோடு, விஷால்-கார்த்தி நடிக்கும் கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்குகிறார். அந்த படங்களை முடித்ததும் ஒரு படத்தில் நாயகனாகவும் நடிக்கிறார் பிரபுதேவா. அந்த படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேசிவருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.