அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரொமான்டிக் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா, நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் கமிட்டாகியிருக்கும் சாவித்ரி, அநீதி கதைகள், விஜய் 61 ஆகிய படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சமந்தா. அதோடு, ரஜினிமுருகன் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக நடிக்கிறார் சமந்தா. அந்த படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை.
என்றாலும், கடந்த பத்து மாதங்களாக அவ்வப்போது சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் சமந்தா. ஏற்கனவே அந்த படத்திற்காக சமந்தா சிலம்பாட்ட பயிற்சி எடுத்து வரும் செய்திகள் வெளியான நிலையில், நேற்று ஏப்ரல் 28-ந்தேதி சமந்தாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம், கடந்த பத்து மாதங்களாக சிலம்பம் பயிற்சி எடுத்து வருவதற்கு நன்றி என டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ஆக, தான் நடிக்கவிருக்கும் ஒரேயொரு படத்திற்காக பத்து மாதங்களாக சமந்தா சிலம்பாட்டம் பயிற்சி எடுத்து வருவது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.