விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினுசக்கரவர்த்தி, நேற்று காலமானார். அவருக்கு வயது 72. 1003 படங்களில் நடித்துள்ள வினுசக்கரவர்த்தி, கதாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.
மண்சார்ந்த கதையில் இவரை விட வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாக நடித்து விட முடியாது. கனீர் குரலும், கம்பீரமான தோற்றமும் இவரது அடையாளம். ரஜினி, கமல், விஜயகாந்த் தொடங்கி அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வினுசக்கரவர்த்தியின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னையில் உள்ள சாலிகிராமம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரையுலகினர் அஞ்சலி : வினுசக்கரவர்த்தியின் உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் விஷால், பொன்வண்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சிவக்குமார், கார்த்தி, செந்தில், சரவணன், மயில்சாமி, நெப்போலியன், எஸ்.பி.முத்துராமன், தாமு, சூரி, சங்கிலி முருகன், ஸ்ரீமன், ஒய்ஜி மகேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரமேலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார்.