இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் டி.வியின் நட்சத்திர தொகுப்பாளினியான டிடிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நட்சத்திரா. இன்னும் சொல்லப்போனால் டிடிக்கு போட்டியாக நட்சத்திராவை அவர் பணியாற்றும் சேனலே உருவாக்கி வருகிறது. அந்த அளவிற்கு முக்கியத்தும் கொடுக்கிறார்கள். தற்போது இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நட்சத்திராவுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. சினிமாவுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக குறும்படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார்.
நட்சத்திரா ஏற்கெனவே நடித்த ஏனோ வானிலை மாறுதே, இவள் அழகு குறும்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இணையதளங்களில் பல லட்சம் பேர் பார்த்தனர். தற்போது இரண்டு குறும்படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் எந்த சம்பளமும் வாங்காமல் நடிக்கிறார் என்பது கூடுதல தகவல்.
"கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களின் குறும்படங்களில் நடித்தேன். அது இப்போதும் தொடர்கிறது. அவர்கள் நம்பிக்கையுடன் வந்து கேட்கும்போது மறுக்க முடியாமல் நடிக்கிறேன். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வருகிறது. இப்போதைக்கு எதையும் ஏற்கவில்லை. என்னால் நன்றாக நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வரும்போது சினிமா பற்றி யோசிப்பேன்" என்கிறார் நட்சத்திரா.