Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வினோத் கண்ணா மறைவு - பாகுபலி-2 சிறப்பு காட்சி ரத்து

27 ஏப், 2017 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Bahubali2-special-show-canceled-due-to-Vinod-Khannas-dead

நடிகர் வினோத் கண்ணாவின் மறைவையொட்டில் பாகுபலி-2 படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் வினோத் கண்ணா. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், கரண் ஜோகர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பாகுபலி-2 படம் நாளை உலகம் முழுக்கவும், சில வெளிநாடுகளில் இன்றும் ரிலீஸாக இருக்கிறது. ஹிந்தியில் வெளியாகும் பாகுபலி-2 படத்தை கரண் ஜோகர் வெளியிடுகிறார். இதையொட்டு இன்று சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வினோத் கண்ணாவின் மறைவால் அந்தக்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து கரண் ஜோகர் கூறியிருப்பதாவது... ‛‛பாலிவுட்டின் சிறந்த நடிகரான வினோத் கண்ணாவின் மறைவு, அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருசிறந்த நடிகரை இழந்துவிட்டோம். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நடைபெற இருந்த பாகுபலி படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.


Advertisement
ரைட்டாவில் இணைந்த திவ்யா தத்தாரைட்டாவில் இணைந்த திவ்யா தத்தா வினோத் கண்ணாவிற்கு சஞ்சய் தத் இரங்கல் வினோத் கண்ணாவிற்கு சஞ்சய் தத் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yen Intha Mayakkam
    Tamil New Film Bhaskar oru Rascal
    Tamil New Film Vandi
    • வண்டி
    • நடிகர் : வித்தார்த்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :ரஜீஸ் பாலா
    Tamil New Film Dhuruva natchathiram

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in