தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாவது பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மில்கா சிங், மேரிகோம், தோனி, அசார், சரப்ஜித் சிங்... உள்ளிட்ட பலரது வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றன. இந்த வெற்றி மேலும் பல பிரபலங்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தூண்டியிருக்கிறது. அப்படி, இப்போது பிரபல பாட்மின்ட்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது.
இதில் சாய்னாவாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில், இப்போது அந்த ரோலில் ஸ்ரத்தா கபூர் நடிப்பது உறுதியாகியுள்ளது. சாய்னாவின் வாழ்க்கை படத்தை அமோல் குப்தா இயக்குகிறார், டி-சிரீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதுகுறித்து ஸ்ரத்தா கூறியிருப்பதாவது... ‛‛பள்ளி பருவத்தில் நிறைய பெண்கள் பாட்மின்ட்டன் விளையாடி இருப்பார்கள். சாய்னா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர், உலகின் நம்பர்-1 வீராங்கனை மட்டுமல்ல, இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். இந்த ரோலுக்காக என்னை தயார் செய்ய மிகவும் ஆவலாய் இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஸ்ரத்தா கபூர், தாவுத் இப்ராஹிம் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.