ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் சண்முகம் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு. ஆர்வியார் இயக்கியிருந்தார். ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ, மேக்னா இவர்களுடன் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். சாகித்யா இசை அமைத்திருந்தார். நந்து ஒளிப்பதிவு செய்திருந்தார்.
அநாதைகளான 5 நண்பர்கள் ஒன்றாக வளர்ந்து கட்டடத் தொழிலாளியாகிறார்கள். அந்த வருமானத்தை கொண்டு தவறான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண் அவர்களை எப்படி நல்வழிப்படுத்துகிறாள் என்கிற கதை. கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வாழலாம், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை இத்திரைப்படத்தில் யதார்த்தமாக பதிவு செய்திருந்தார்க்ள.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காமல் ஒரு சில தியேட்டர்களில் மட்டும் வெளியிடப்பட்டது. இப்போது அதனை மீண்டும் வெளியிடுகிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் அதற்குரிய உதவிகளை செய்து வருகிறது.