ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
திருமணம் எனும் நிக்காஹ், வடகறி, வலியவன், புகழ், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், எனக்கு வாய்த்த அடிமைகள், என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வருகிறார் ஜெய். ஆனாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
இத்தனைக்கும் படம் சம்மந்தமான புரமோஷனுக்கு வர மாட்டார். படத்தின் இசைவெளியீட்டுக்கும் வர மாட்டார். சுருக்கமாக சொல்வது என்றால், தன்னை இன்னொரு அஜீத் என்று நினைத்துக் கொண்டுள்ளார் ஜெய்.
இந்நிலையில், அவர் தற்போது 'பலூன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெய் உடைய கேரியரில் அவரை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். 70 எம்எம், மாஸ்டர் பிளான் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து பலூன் படத்தை தயாரித்து வருகின்றன. இப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார்.
இருவரும் செட்டுக்குள் வந்தால் கேலி, கிண்டல், ரொமான்ஸ் என ஒரே கலாட்டாவாக இருக்கிறதாம். அதனால் படப்படிப்பு சற்று பாதிக்கப்படுவதாக யூனிட்டில் பேசிக்கொள்கிறார்கள்.