இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சன்னி தியோல். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் கரண் தியோலும் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார். முதல்படமாக "பல் பல் தில் கே பாஸ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை சன்னி தியோலே தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது. ஆனால் முதல்படம் ரிலீஸாவதற்கு முன்பே மற்றொரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் கரண் தியோல். இப்படத்தை குணால் தேஷ்முக் இயக்க, தினேஷ் விஜன் தயாரிக்க உள்ளார். இதை இயக்குநர் குணால் தேஷ்முக்கும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.