'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கரண் ஜோகர், தனது தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் நிறைய படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒரு படம் தான் "சித்தாத்". அர்ஜூன் கபூர், வருண் தவான் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் ஆலியா பட் விலக, அவருக்கு பதிலாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க கமிட்டானார். இந்நிலையில் இப்போது அர்ஜூன் கபூரும் இந்தப்படத்திலிருந்து விலகியுள்ளார். விலகலுக்கான காரணம் தெரியவில்லை. அதனால் அர்ஜூனுக்கு பதிலாக ஆதித்யரா ராய் கபூர் இணைந்துள்ளார். முக்கோண காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை அபிஷேக் வர்மன் இயக்குகிறார். தற்போது ஆதித்யா மற்றும் வருண் தவான் ஆகியோர் வேறு சில படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். அதை முடித்ததும் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் "சித்தாத்" படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.