இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அஜித் இன்று இருக்கிற உயரம் ரொம்ப பெருசு. ஆனால் அவர் அந்த உயரத்தை எளிதில் பெறவில்லை. அவரை அறிமுகப்படுத்த அப்பா இயக்குனர் இல்லை, அம்மா கோடீஸ்வரி இல்லை, தமிழ் சினிமாவில் உற்றாரும் இல்லை, உறவினரும் இல்லை. தன்னந்தனி ஆளாக, சுயம்புவாக சினிமாவில் ஜெயித்தார்.
1990-ம் ஆண்டு அமராவதி படத்தில் அவர் அறிமுகமாவதற்கு முன்பு பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் தலைகாட்டியிருக்கிறார். அதோடு அவர் தூர்தர்ஷனுக்காக தயாரிக்கப்பட்ட துண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். சுமார் பத்து நிமிடம் ஓடக்கூடிய விழிப்புணர்வு படங்கள் அவை. அஜித் நடித்த ஒரு துண்டு படத்தின் ஒரு பகுதி தற்போது இணைய தளத்தில் வெளியாகி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதே தோற்றம், அதே மாடுலேசன், அதே மேனரிசம் அப்படியே இருக்கிறது. மெலிந்த உடம்பும், கண்களில் கனவும்தான் புதிதாக தெரிகிறது.
இந்த துண்டு படத்திலும் அவர் ஒரு பைக் ரேஸ்சில் வென்று தான் காதலித்த பெண்ணை கைபிடிப்பதாக கதை வருகிறது. ஒரு முன்னாள் ராணுவ வீரரின் மகளை அஜித்தும், இன்னோருவரும் காதலிக்கிறார்கள். அந்த ராணுவ வீரர் என் மகளை திருணம் செய்கிறவன் வீரனாக இருக்க வேண்டும் என்று கூறி ஒரு பைக் ரேஸ் வைக்கிறேன், அதில் வெற்றி பெறுகிறவனுக்குத்தான் என் பெண்ணை தருவேன் என்கிறார். அஜித்தும் தன் மெக்கானிக் நண்பரிடம் விஷயத்தை சொல்கிறார். நான் உனக்கு பக்காவாக ஒரு பைக் ரெடி பண்ணித் தருகிறேன். நீ கல்யாண ஏற்பாடுகளை செய் என்கிறார். அஜித் ரேஸில் வெற்றி பெற்றரா? காதலியை கை பிடித்தாரா என்பது கதை. இந்த துண்டு படம் இப்போது இணைய தளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.