சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
தெறியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 61வது படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னை மற்றும் சென்னையைச்சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது. சில காட்சிகளை பின்னி மில்லிலும் படமாக்கினார் அட்லி. தற்போது சென்னையிலுள்ள தீம் பார்க் ஒன்றில் நடந்து வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 28-ம் தேதி முதல் ஐரோப்பா பறக்கிறது பட யூனிட்.
அங்குதான் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். குறிப்பாக, இளவட்ட விஜய்யின் ரொமான்ஸ் காட்சிகள் என்பதால் அங்குள்ள இயற்கை எழில் மிகுந்த பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம். முக்கியமாக, விஜய்-காஜல் சம்பந்தப்பட்ட டூயட் மற்றும் வேறு சில பாடல்களும் ஐரோப்பாவில் தான் படமாகிறதாம். அங்கு நடைபெறும் படப்பிடிப்போடு பூசணிக்காய உடைத்து விடுவார்கள் என்று கூறப்படும் நிலையில், ஜூன் மாதம் முதல் இறுதிகட்ட பணிகளை தொடங்குகிறாராம் அட்லி.