'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பாகுபலி 2' படத்தின் போஸ்டர்களும், புகைப்படங்களும் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தி வருகின்றன. இந்தியத் திரையுலகில் உள்ள இயக்குனர்கள் ஒவ்வொருவரும் பொறாமைப்படும் அளவிற்கு இயக்குனர் ராஜமௌலி படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார் என்பது அவர்களுடைய ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாகத் தெரிகிறது. ஏற்கெனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த போது பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அனுஷ்கா எப்படி அவ்வளவு அழகாக இருக்கிறார் என வியப்பில் ஆழ்ந்தார்கள்.
இன்று காலையில் அனுஷ்காவின் இளமையான தோற்றப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மற்றுமொரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் அனுஷ்கா வயதான கதாபாத்திரத்தில் கிழிந்த ஆடையுடன், கலைந்த தலைமுடியுடன் 'டி-கிளாமரைஸ்' ஆகத்தான் வந்தார். தமன்னா தான் முதல் பாகத்தில் தனிப் பெயரைப் பெற்றார். ஆனால், இரண்டாம் பாகத்தில் அனுஷ்காதான் படம் முழுவதும் வருவார் என்கிறார்கள். தமன்னா சிறிது நேரம் மட்டும்தான் வருவாராம்.
அனுஷ்காவின் இன்றைய போஸ்டரைப் பற்றி படத்திற்கு வசனம் எழுதியுள்ள மதன் கார்க்கி “மகிழ்மதியின் இளவரசன் குந்தலதேச இளவரசியின் மேல் காதலுற்ற கதை,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இரண்டாம் பாகத்தில் நடிக்கும் போது அனுஷ்கா மிகவும் குண்டாக இருந்தததால் அவருடைய தோற்றத்தை ஒல்லியாக காட்டுவதற்காக சில கிராஃபிக்ஸ் வேலைகளைப் படக்குழுவினர் செய்திருக்கிறார்கள். அதனால்தான் அனுஷ்கா இன்னும் அழகாகத் தெரிகிறார் போலிருக்கிறது.