டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'அழகிய தமிழ்மகன்' படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களை எழுதி இருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.
நா.முத்துக்குமாரின் மறைவுக்குப் பிறகு விவேக்குக்கு நிறைய பாடல் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த அடிப்படையில் தற்போது விஜய் 61 படத்துக்கும் பாடல் எழுதுகிறார் விவேக்.
''இசை மேதையுடனும், ஸ்பெஷல் நடிகர் மற்றும் இயக்குனருடனும் 'விஜய் 61' படத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததை மிகப்பெருமையாகக் கருதுகிறேன். விஜய் சார் மற்றும் ரஹ்மான் சாருடனான அனுபவங்கள் என்றும் என் நினைவில் நிற்கும். இயக்குனருக்கு நன்றிகள்!'' என்று அந்த படத்திற்கு பாடல் எழுதி சந்தோஷத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதற்கிடையில், 'விஜய் 61' படத்தின் பாடல்கள் விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. படத்தின் இசையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜய் 61 படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.